Fri. Dec 20th, 2024

காவலரை கொடுமை செய்த ஆய்வாளர் கெளதமன்..?| தற்கொலை கடிதம் எழுதிய காவலர்..!

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பொன்லிங்கம் என்பவர் காவல்துறையில் இரண்டாம் நிலை காவலராக
ராயலா நகர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார்.

சென்னை வளசரவாக்கம் ராயலா நகர் காவல் நிலையத்தில் பணி புரிந்து வந்த நிலையில் தன் தாய் உடல் நலகுறைவால் அவதியுற்றதாகவும் அவரை உடன் இருந்து காப்பாற்ற விடுப்பு கேட்டதாகவும் அதற்க்கு தரக்குறைவாக பொன்லிங்கத்தை திட்டி விடுப்பு வேண்டுமென்றே கொடுக்க மறுத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளார் கண்ணியமிக்க ஆய்வாளர் கெளதமன்…

ஒரு கட்டத்தில் தனது தாய் இறந்துவிட மன வேதனையில் காவல் உயரதிகாரிகளுக்கு ஆய்வாளரின் டார்ச்சர் பற்றி கடிதம் வாயிலாக எழுதி வைத்துவிட்ட தற்கொலைக்கு முயன்றுள்ளார் பொன்லிங்கம்..

இதற்கிடையில் பொன்லிங்கம் உயரிதிகாரிகளுக்கு எழுதிய தற்கொலை கடிதம் அதி வேகத்தில் நேற்று சமூக வலைதளங்களில் பரவி அது உயரதிகாரிகளின் கவனத்துக்கு சென்றதும் உடனடியாக பொன்லிங்கத்தை காப்பாற்றி அவர் சொந்த ஊரான திருநெல்வேலிக்கே மாற்றம் தந்து அனுப்பியுள்ளனர்.

பொன்லிங்கம் எழுதிய கடிதத்தில் தன் பணியில் இதுவரை மூன்று ஆய்வாளர்களுக்கு கீழ் பணி செய்து வந்ததாகவும் அவர் மூவருமே மரியாதையுடனும் பண்புடனும் நடத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விடுப்பு பல முறை காவல் ஆய்வாளர் கெளதமனிடம் கேட்டும் பொன்லிங்கத்தின் சூழ்நிலையை அறிந்து கொண்டு வேண்டுமென்றே இழுபறி செய்து விடுப்பு கொடுக்க மறுத்துள்ளதால் தான் தனது தாய் இறந்து போனதாக அக்கடித்தத்தில் ஆய்வாளர் மீது உண்மை குற்றச்சாட்டை பதிவு செய்தீள்ளார்…

தன்னை மட்டுமல்லாமல் ஆய்வாளருக்கு கீழ் பணி செய்யும் அனைத்து காவலர்கள் முதல் உதவி ஆய்வாளர் வரை அனைவரையும் தரக்குறைவாக நடத்துவது ஆய்வாளர் கெளதமின் வாடிக்கையான செயல் எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது..

மேலும் விடுப்பு கொடுக்க மறுத்து தரக்குறைவாக நடந்துகொண்ட ராயலா நகர் காவல் ஆய்வாளர் கெளதமன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்…

குறிப்பு :- ( இது சம்பந்தமாக காவல் ஆய்வாளர் திரு.கெளதமன் அவர்கள் எந்த விளக்கம் அளித்தாலும் வெளியிட தயாராக உள்ளது பேராண்மை. )

நிருபர் வெ.ராம்