Fri. Dec 20th, 2024

சென்னையில் தடை செய்யப்பட்ட போதை ஸ்டாம்புகள்|போதை மாத்திரை விற்பனை செய்தவர் கைது|

சென்னையில் தடை செய்யப்பட்ட போதை ஸ்டாம்புகள் | போதை மாத்திரை விற்பனை செய்தவர் கைது |

சென்னை ஆலந்தூர் பகுதியில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் மற்றும் LSD ஸ்டாம்புகள் விற்பனை செய்து வந்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆலந்தூர் பகுதியில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது அத்தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட ஆலந்தூர் காவல் துறை அப்பகுதியில் உள்ள வேதகிரி தெருவைச் சேர்ந்த கார்த்திக் ஆனந்த் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர் இந்த விசாரணையில் கார்த்திக் ஆனந்த் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் மற்றும் LSD ஸ்டாம்புகளை விற்பனை செய்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டது மேலும் அவரிடம் இருந்து 3-லட்சம் ரூபாய் மதிப்புள்ள 30 LSD போதை ஸ்டாம்பு மற்றும் 45-போதை மாத்திரைகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்…

கார்த்திக் ஆனந்த் என்பவருக்கு இந்த போதைப் பொருட்கள் எங்கு இருந்து கிடைக்கிறது என்ற தகவல்களை விசாரிப்பதற்காக அவரை ஆலந்தூர் காவல் துறை போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்…

இது தொடர்பாக கார்த்திக் ஆனந்த் என்பவரின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது…

நமது நிருபர்…