Fri. Dec 20th, 2024

ரஜினி – ஜெ., வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்?

ரஜினி – ஜெ., வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் ??

சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் நடிகர் ரஜினிகாந்த் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…?

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் யார் என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது, கோயம்புத்தூரைச் சேர்ந்த முகமது அலி என்ற வாலிபர் என தெரியவந்துள்ளது. அவர் மன அழுத்தத்தின் காரணமாக மிரட்டல் விடுத்ததாக போலீஸ் விசாரணையில் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக முகமதுஅலியிடம் கோயம்புத்தூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சென்னை தேனாம்பேட்டை போலீசார் ரஜினி மற்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா  இல்லத்தில் சோதனை செய்தனர்.

வெடிகுண்டு கண்டறியும் கருவி மற்றும் மோப்ப நாய் உதவியுடன் நடத்திய சோதனையில் போலியான அழைப்பு என்றும் தெரிய வந்துள்ளது என தகவல்…