Sat. Dec 21st, 2024

கோயம்பேடு சுற்று வட்டார பகுதியில் 4614-சிசிடிவி கேமராக்களை| துவக்கி வைத்த காவல் ஆணையர் ஏ.கே.வி.|

கோயம்பேடு சுற்று வட்டார பகுதியில்
4614-சிசிடிவி கேமராக்களை | துவக்கி வைத்தார் காவல் ஆணையர் ஏ.கே.வி |

சென்னை பெருநகர காவல் சார்பில், அண்ணா நகர் காவல் மாவட்டத்தில் உள்ள கோயம்பேடு காவல் சரகத்தில், K-10 கோயம்பேடு காவல் நிலைய எல்லையில் பொருத்தப்பட்டுள்ள 1609 சிசிடிவி கேமராக்கள், K-11, சி.எம்.பி.டி காவல் நிலைய எல்லையில் பொருத்தப்பட்டுள்ள 999- சிசிடிவி கேமராக்கள் மற்றும்
T-4,மதுரவாயல் காவல் நிலைய எல்லையில் பொருத்தப்பட்டுள்ள 2006 சிசிடிவி கேமராக்கள் என மொத்தம் புதிதாக பொருத்தப்பட்டுள்ள 4614 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஏ.கே.விசுவநாதன், அவர்கள் 04/03/2019 கோயம்பேடு அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர்
ஆர்.தினகரன், மேற்கு மண்டல இணை ஆணையர் திருமதி பி.விஜயகுமாரி, அண்ணா நகர் காவல் துணை ஆணையாளர் எம்.சுதாகர், காவல் அதிகாரிகள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த வியாபாரிகள் தனியார் நிறுவனத்தினர் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்…நிருபர் வெ.ராம்