வாகனத்தை திருடி அதை வைத்து|7-சவரன் சங்கிலியை பறித்தவர் கைது|
வயதான பெண்ணிடம் சங்கிலி பறிப்பு !
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் உட்கோட்டம் ஆறுமுகனேரி காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் 27ம் தேதி சீனந்தோப்பில் சுமார் 55வயது மதிக்கதக்க வயதான பெண் தனது வீட்டின் முன்பு நின்று இருந்தவரை அடையாளம் தெரியாத, இருசக்கர வாகனத்தில் வந்த சுமார் 40 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் அவரது கழுத்தில் போட்டு இருந்த 7 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்று விட்டார்கள் என புகார் அளித்தார்…
உடனே ஆறுமுகனேரி காவல் நிலையம் வழக்கு பதிவுசெய்து, சங்கிலி பறிப்பில் ஈடுப்பட்ட குற்றவாளியை தேடிவந்த நிலையில் தூத்துகுடி புல்தோட்டத்தை டெலிபோன் காலனியை சேர்ந்த சந்திரசேகர் மகன் விஜய் வயது 38 என்பவரை பிடித்து தீவிரமாக விசாரித்ததில் பறிக்கப்பட்ட 7 பவுன் செயின் மற்றும் செயின் பறிக்க பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் செயின் பறிக்க பயன்படுத்திய மேலே குறிப்பிட்டுள்ள இரு சக்கர வாகனம் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் கடந்த 25ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது மேலும் மேற்படி குற்றவாளி மீது திருச்சி மாவட்டத்தில் 1 வழக்கும், திருநெல்வேலி மாவட்டத்தில் 4- வழக்குகளும், கோவில்பட்டியில் 2- வழக்குகளும், தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், தூத்துக்குடி மத்திய காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விசாரணைக்கு பின்னர் குற்றவாளியை திருசெந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்…
நிருபர் வெ.ராம்