விவசாயிகளை ஏமாற்றி சங்கு ஊதியவர்களுக்கு| சாவுமணி அடித்த மக்கள் செய்தி மையம்|
விவசாயிகளை ஏமாற்றி சங்கு ஊதியவர்களுக்கு| சாவுமணி அடித்த மக்கள் செய்தி மையம்|இலவச மின்சாரம் ரூ.15,000 கோடி ஊழல்..! ஏமாற்றப்பட்ட விவசாயிகள் என்ற தலைப்பில்…
சென்னை மாநகராட்சி ரூ.135 கோடி ஊழல் சிக்கிய அமைச்சர் பெஞ்சமின்…!
புவியியல் சுரங்கத்துறை ரூ.2,000 கோடி ஊழல் பின்னணியில் 30- ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்..!
போடாத சாலைக்கு பில் போடுவதும், பில் போட்ட பணத்தை அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை பங்கு பிரித்துக் கொள்ளுவதும் தமிழகத்தில் சாதாரணமானது..!
இப்படி சென்னை மாநகராட்சிக்கு Upgradation of four BUS route roads to international standards in corporation of Chennai.. இந்த திட்டத்திற்கு ரூபாய்.135 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.ஆனால் சாலையே போடாமல், போலி எம்.புத்தகம் மூலம் ரூ.135 கோடி செலவு செய்யப்பட்டதாக கோப்புகளில் எழுதிவிட்டார்கள்.பிறகு பணி நல்ல முறையில் நடந்ததாகவும் போலி எம்.புத்தகமும் தயாராகி அதிகாரிகள்,அமைச்சர் உட்பட பணப் பட்டுவாடா செய்யப்பட்டு ரூ.135- கோடி முறைகேடு நடந்துள்ளது இதை முழு ஆதாரங்களுடன் இன்று அதிரடியாக வெளியிட்டது மக்கள் செய்தி மையம்…!
மக்கள் செய்தி மையம் ஊழல் புத்தகங்களின் வரிசையில் 18-வது புத்தகத்தை மார்ச் 2ம் தேதி இன்று காலை பத்திரிகையாளர்கள் உட்பட யாருக்குமே இடத்தை குறிப்பிடாமல் 50க்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்களுடன் அதிரடியாக சென்னை அண்ணா சமாதியில் காலை 11-மணிக்கு இலவச மின்சாரம் ஏமாற்றப்பட்ட விவசாயிகள் என்ற தலைப்பில் ரூ.15,000 கோடி ஊழல் புத்தகத்தை மூத்த பத்திரிகையாளரும் சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவருமான திரு.வி.அன்பழகன் அவர்கள் வெளியிட பத்திரிகை துறையினர், விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் என அனைவரும் பெற்றுக் கொண்டனர்…
தமிழகம் முழுவதும் இந்த விவசாயிகள் இலவச மின்சாரம் சம்மந்தமான ஊழலை பல அரசியல் அமைப்புக்கள், எதிர்கட்சிகள் தங்களது பிரச்சாரத்திற்கு பயன்படுத்த உள்ளதாகவும் தெரிகிறது…