Fri. Dec 20th, 2024

“ஆவணங்கள்” | வழக்கறிஞர்கள் தரும் விளக்கங்கள் என்ற நூல் வெளியீடு.

வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தியின் “ஆவணங்கள்” வழக்கறிஞர்கள் தரும் விளக்கங்கள் என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில்
(25-02-2019) நேற்று மாலை மயிலாப்பூரில் உள்ள கவிக்கோ மன்றத்தில் நடைபெற்றது இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கவிஞர் மு.மேத்தா, கலந்துக் கொண்டு நூலை வெளியிட… நடிகை குட்டி பத்மினி  பெற்றுக் கொண்டார். வேல்ஸ் பல்கலைக்கழக முதல்வர் திரு.மகாலிங்கம், வின்டிவி.நெறியாளர் ஜனார்த்தனன், மற்றும் பச்சையப்பன் கல்லூரி உதவி பேராசிரியர் திரு.முத்துசாமி, பேராசிரியர் முனைவர் கருப்பன், இசை ஆராய்ச்சியாளர் டெஸ்லா கணேஷ் பேராசிரியர் டேவிட் அந்தோணிநாதன், உள்துறை கூடுதல் செயலாளர் பி.ஜி.தியாகராஜன். மற்றும் பத்திரிகையாளர்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்…