அழகின் ஓவியம் இன்று சிதைந்து கிடக்கிறது | சித்தன்ன வாசல்
கஜா புயலினால் சிதைந்த சித்தன்னவாசல் அழகை மீட்டெடுக்க கோரிக்கை :
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள அழகிய சுற்றுலாத் தளம் சித்தன்னவாசல். இங்கு கி.பி ஏழு மற்றும் எட்டாம் நூற்றாண்டில் சமணர்களால் மூலிகைகளால் தயாரிக்கபட்ட வர்ணங்களை கொண்டு வரையப்பட்ட ஓவியங்கள் குன்றுகளால் சூழப்பட்ட குகைகளில் காணப்படுகிறது. அஜந்தா ஓவியங்களை போன்று தனிச்சிறப்பு வாய்ந்த இந்த ஓவியங்கள் கிட்டத்தட்ட 1200 ஆண்டுகள் பழமையானவை. ஆனா இந்திய விடுதலைக்கு பின் பராமரிப்பின்றி புகை படிந்து கிடந்த இவை பின் செயற்கை வர்ணங்களை கொண்டு புதுப்பிக்கப்பட்டது.
இங்கு பூங்கா சிறுவர் பூங்கா சமணர்படுகை ஓவியங்கள் படகு சவாரி உள்ளிட்ட பல பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. இதில் பல மரங்கள் அழகுக்காகவும் நிழலுக்காகவும் வளர்க்கப்பட்டு வந்தது இந்நிலையில் கடந்த வருடம் ஏற்பட்ட கஜா புயலினால் மரங்கள் சாய்ந்தன முகப்பில் உள்ள இரும்பு கதவுகள் உடைந்து உள்ளன மேலும் அங்கு உள்ள சிலைகள் மற்றும் ஊஞ்சல்கள் உடைந்த நிலையில் உள்ளது இதுநாள் வரையில் இது சரி செய்யப்படவில்லை இதனால் உலக புகழ்பெற்ற சித்தன்னவாசலின் அழகு பாழடைந்து உள்ளது இதனை சரி செய்து மீண்டும் பழைய சித்தன்னவாசல் அழகை கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.