Fri. Dec 20th, 2024

மணல் லாரியை தோண்ட தோண்ட மூட்டைக்கணக்கில் கஞ்சா…!

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் லாரி மூலம் கடத்தப்பட்ட 1020- கிலோ கஞ்சா பொட்டலங்களை போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

ஹைதராபாத்தில் உள்ள ராஜேந்திர நகர் பகுதியில் 1020-கிலோ கஞ்சாவை லாரி மூலம் மறைத்து கொண்டு செல்லப்படுவதாக போதை பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது இந்த தகவலின் அடிப்படையில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு மண்டல அதிகாரிகள் அப்பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது நிலக்கரி துகள்களை மேலே கொட்டி 1020 கிலோ கஞ்சாவை பொட்டலாமாக கடத்தி சென்றது தெரிய வந்தது இதனையடுத்து போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்ததோடு லாரி ஓட்டுநர் பிதாரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் கஞ்சா பொட்டலங்கள் விசாகப்பட்டினத்தில் இருந்து தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சகீராபாத் பகுதிக்கு கடத்தப்படவிருந்தது தெரியவந்தது இதனை தொடர்ந்து லாரி ஓட்டுநர் பிதாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 2019 ஆம் ஆண்டு மட்டும் ஹைதராபாத் துணை மண்டல அலுவலகத்தில் 4,557 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது…