டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் வெளியான தவறான செய்தி | ஆசிரியர் மன்னிப்பு | ஆடியோ ஆதாரம்
டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் வெளியான தவறான தலையங்கம் ஆசிரியர் மன்னிப்பு…
பாகிஸ்தான் தான் இந்த தாக்குதலக்கு காரணம் என மத்திய அரசு குற்றச்சாட்டு! ஜம்முவில் உள்ளூர் இளைஞர் ஐஈடி(மேம்பட்ட வெடிக்கும் சாதனம்) அணிந்துகொண்டு சிஆர்பிஎஃப் மீது மோதியதில் கொடூர தாக்குதல்!இதுவரை கண்டிராத தீவிரவாத தாக்குதல் ஜம்மு காஷ்மீரில் நடைபெற்றுள்ளது!
இந்த தலையங்கத்துடன் மும்பாய் எடிஷன் ஆன டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு செய்தியை பிரசுரம் செய்ய அது சமூக ஊடகங்களில் வைரலாக பரவ, மும்பாயை சேர்ந்த வழக்கறிஞர் ஷாஜீ என்பவர் டைம்ஸ் ஆஃப் இந்தியா அலவலகத்திற்க்கு போன் செய்து எடிட்டரை கதறவிடுகிறார். மேலும் இந்த தலைப்பிற்க்கு பலர் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். “உள்ளூர் இளைஞர்”என்பது தவறு அது ஒரு தீவரவாதி என்பதற்க்கு பதில் உள்ளூர் இளைஞர் என்று பொய்யான தகவலை செய்தியாக்கி பிறகு பாக் மீது குற்றம் சொல்கிறது மத்திய அரசு என்று தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளனர்
பிறகு டைம்ஸ் ஆஃப் இந்திய நாளேடு பொய்யான தகவலை பிரசுரம் செய்ததற்க்கு தனது பக்கத்தில் எடிட்டர் தலைப்பை தவறாக போட்டதற்க்கும் அதை மாற்றியமைத்ததற்க்கும் விளக்கம் அளித்தும் மன்னிப்பு கேட்டுள்ளார்
உள்ளூர் இளைஞர் தான் என குறிப்பிட்டுள்ள டைம் ஆஃப் இந்தியா நாளேடு என கூறவருகிறது?!
இந்தியாவில் ஜம்மூ காஷ்மீர் தீவிரவாதிகளின் நாடு என்று சொல்கிறதா? ஜம்மூ காஷ்மீர் இந்தியாவில் ஒரு மாநிலமா அல்லது தீவிரவாதிகள் ஊடுருவும் மாநிலமா? அல்லது ஜம்மூகாஷ்மீர் மக்கள் அனைவருமே தீவரவாதிகளா?!
இப்படி உள்ளூர் இளைஞர் என்று தலைப்பை போட்டுவிட்டு பிறகு பாக் மீது அரசு குறைகூறுகிறது என்பதற்க்கு பொருள்?!
இது ஒரு புறம் இருக்க Martyred- உயிர்தியாகம் என குறிப்பிடுவதற்க்கு பதில் சிஆர்பிஎஃப் வீரர்கள் Killed-கொல்லப்பட்டுள்ளனர் என்று தனது வக்கிரத்தை இது போன்ற வார்த்தைகளால் பிரசுரம் செய்துள்ளது டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு!
விவரங்கள் சரிவர விசாரிக்காமல் ஜர்னலிசம் என்ற பெயரில் பொய்யான செய்திகளையும் கொடூர வார்த்தைகளையும் தனது செய்தி கட்டுரையில் வெளியிட்டு ஜர்னலிசம் என்ற வார்த்தைக்கு அவமதிப்பு எடுத்து தந்துள்ளது டைம்ஸ் ஆஃப் இந்தியா மும்பாய் எடஷன் நாளேடு!