Fri. Dec 20th, 2024

காழ்ப்புணர்ச்சி காரணமாக பழிவாங்கப்பட்ட டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் | Peranmai News

காழ்ப்புணர்ச்சி காரணமாக பழிவாங்கப்பட்ட டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் முத்துக்குமாரசாமி…!!!

சென்னை டாஸ்மாக் முதுநிலை மண்டல அலுவலகம் (SRM) LLA பில்டிங்கில் 4வது  தளத்தில் இயங்கி வருகிறது. இங்கு உள்ள டாஸ்மாக் மண்டல மேலாளர் அறையில் 11ம் தேதி திடீர் என்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வந்தனர்.

அப்போது அங்கு வந்திருந்த விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர் சுமார் 30 பேருக்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து ரூபாய் 2,40,380 கைப்பற்றப்பட்டது. வாரத்தின் முதல் நாள் திங்கட்கிழமை ஊழியர்கள் குறை தீர்ப்பு நாளாக கடைபிடுவது வழக்கம். ஆகையால் வெளிமாவட்டங்களை சார்ந்தவர்கள் சென்னை வந்து முதுநிலை மண்டல மேலாளரை சந்திக்க வந்ததால் கூட்டம் அதிகமாகவே இருந்தது. பிடிபட்ட பணத்தை தவிர அங்கு பணி புரியும் ஊழியர்கள் யாரிடமும் பணம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை உட்பட 7- மண்டலங்களுக்கும் மேலாளர் இந்த முத்துக்குமாரசாமி தான் என்பதால் இவரை பிடிக்காத சிலர் செய்த சூழ்ச்சியால் இந்த தீடிர் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைக்கு காரணம் என்றும் முன்பு இங்கு பணிபுரிந்த ஊழியர் ஒருவரே காரணமாக இருக்கலாம் என ஊழியர்கள் அனைவரும் கூறிவருகின்றனர்…

நமது நிருபர்…