Fri. Dec 20th, 2024

எழும்புக்கூடாக மாணவியின் உடல் | காவல் துறையின் மெத்தனம் | காரணம் என்ன..? | Peranmai News

திருத்தணி அருகில் உள்ளது புது வெங்கடாபுரம் இந்த பகுதியில் சுப்பிரமணி கூலித்தொழிலாளி வசித்து வருகிறார் அவரது மகள் சரிதா வயது 15. இவர்  அருகிலுள்ள கீச்சாசலம் பகுதியில் பத்தாம் வகுப்பு தேர்வு பாடப்பிரிவில் படித்து வருகிறார்.  கடந்த வருடம் 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காணாமல் போனதாக அவரது தந்தை சுப்பிரமணி பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். ஆனால் போலீசார் சரியாக விசாரிக்க வில்லை என்று இறந்த மாணவியின் தந்தை சுப்பிரமணி 2019 ஜனவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அதன் பிறகும் போலீசார் சரியான முறையில் விசாரணை செய்யவில்லை.. 

இந்த நிலையில் நேற்று மாலை கீச்சலம் பகுதியில் கரும்பு வெட்டும் தொழிலாளி சுரேஷ் என்பவர் இயற்கை உபாதைக்காக அந்த பகுதியில் உள்ள ஏரி கால்வாய் செல்லும்பொழுது அரசு பள்ளி சீருடையுடன் எலும்பு கூடு கிடப்பதாக தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் சரிதாவின் தந்தை சுப்பிரமணி மற்றும் அவரது உறவினர்கள் இறந்தது சரிதான் கூறிவந்தனர். இந்த நிலையில் திருவள்ளூரில் இருந்து வந்த மருத்துவ குழு கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு மற்றும் அவரது துணிமணிகளை சோதனை செய்து கொடுக்கும் அறிக்கையை வைத்து.. இருந்தது சரிதா என்ற மாணவி என்று உறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது…

இதில் முதல் கேள்வி பள்ளிக்கும் அவர் வீட்டுக்கும் நடுவில் மாணவி காணாமல்போயுள்ளார்.. ஏன் போலீசார் விரைந்து விசாரிக்க வில்லை..? நடுவில் உள்ள சம்பவத்திற்கு காரணமான முக்கிய நபர் யார்..? மேலும் விசாரணை அதிகாரி ஏன் காலதாமதம் செய்தார்..?

சென்னை உயர்நீதிமன்றத்தில் மாணவியின் தந்தை ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தும் எந்த முறையில் நீதிமன்றத்தை இவர்களால் சமாளிக்க முடிந்தது..?

மாணவி காணாமல் போய் 5 மாதம் ஆகியும்.. பழைய வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றமும் காவல் துறை இயக்குனரகம் ஒரு அறிவிப்பு செய்துள்ளது அந்த அறிவிப்பை மறந்த திருவள்ளூர் மாவட்ட திருத்தணி டிஎஸ்பி சேகர் மாணவிகள் காணாமல் போனால் 90 நாட்கள் வரை காவல் நிலையம் உள்ள காவலர் விசாரிக்கும் அதிகாரியின் பொறுப்பு…

ஆனால் 90 நாட்களுக்கு பிறகு சம்பந்தப்பட்ட காவல் நிலையம் உட்பட்ட பகுதியிலுள்ள டிஎஸ்பி போன்ற உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிதான் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும்… ஆனால் இந்த வழக்கில் திருத்தணி D.S.P சேகர் ஏன் இந்த வழக்கை விசாரிக்கவில்லை..!!

தற்பொழுது தான் இறந்த பிறகு மாணவியின் உடல் அருகே டிஎஸ்பி சேகர் விசாரித்து வருகிறார்… காவல்துறை இயக்குனர் கம் மற்றும் உயர்நீதிமன்றம் 90 நாட்களுக்கு பின்பு விசாரிக்காமல் அலட்சியம் செய்து  டி எஸ் பி யின் மெத்தனப்போக்கு… கூலித் தொழிலாளியின் மகள் பரிதாப மரணம்..