தமிழக ஊடகங்களை நம்பி ஆதாரங்களை தரமாட்டேன் அது மெரினாவில் குழி தோண்டி புதைப்பதற்கு சமம்…!!!
தமிழக ஊடகங்களை நம்பி ஆதாரங்களை தரமாட்டேன் அது மெரினாவில் குழி தோண்டி புதைப்பதற்கு சமம்…!!!
கொடநாடு கொலை கொள்ளை சம்பவங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக ஆவணப்படம் வெளியிட்ட புலனாய்வு பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் இன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்…
அப்போது பேசிய
அவர் 23-ஆண்டு கால இதழியல் பணியில் அதிகாரத்தில் உள்ள பலர் செய்த தவறுகளை வெளிக்கொண்டு வந்துள்ளேன் என்னுடைய குற்றச்சாட்டிற்கு இதுவரை எடப்பாடி பழனிசாமி பதிலளிக்கவில்லை எனக்கு அரசியல் பின்னணி இருப்பதாக கூறிவருகிறார் எனக்கு எந்தப் அரசியல் பின்னணியும் இல்லை என்னுடைய இதழியல் பணி மட்டும்தான் இந்த ஆவணப்படத்தின் பின்னணியில் உள்ளது நான் ராபர்ட் வதோராவை பற்றிய செய்தி எடுத்தபோது எனக்குப் பின்னணியில் பாஜக இருப்பதாக கூறியது போல் தற்போது எனக்கு பின்னணியில் திமுக இருப்பதாக கூறுகிறார்கள்.
சசிகலாவிற்கு ஆதரவாக நான் செயல்படவில்லை. சயன், மனோஜ் இருவருக்கும் நீதிமன்றத்தில் உத்திரவாதம் அளித்தவர்களை பொறுத்தவரையில், எனது வழக்கறிஞர்தான் அவர்களை ஏற்பாடு செய்தார் அதற்கான பணத்தை நான் வழங்கினேன் இந்த கொடநாடு கொலை சம்பவ வழக்கை விசாரித்த காவல் அதிகாரி பேட்டி கூட என்னிடம் உள்ளது தக்க சமயத்தில் வெளியிடுவேன் ஆறுமுகசாமி ஆணையத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை அந்த ஆணையம் எனக்கு சம்மன் அளித்தால் ஆஜராகவும் தயார் கொடநாடு விவகாரத்தை பொறுத்தவரை சட்டரீதியாகவே சந்திப்பேன் என்று கூறினார்…!!