Mon. Oct 7th, 2024

தமிழ்நாடு டிஜிட்டல் ஆப்ரேட்டர்கள் நல சங்கத்தின் தலைவர் பத்திரிகையாளர் சந்திப்பு…!!!

இந்தியா முழுவதும் படித்து பட்டம் பெற்ற சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆபரேட்டர்கள் சுய தொழிலாக 30 ஆண்டுகள் கேபிள் தொழிலை செய்துவருகின்றனர். பாதுகாப்பற்ற வகையில் லட்சக்கணக்கான ரூபாயை முதலீடு செய்யும் பொதுமக்களுக்கு குறைந்த செலவில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை சேவை மனப்பான்மையோடு வழங்கிவருகிறார்கள் அதனினும் மழை, புயல் போன்ற இயற்கை சீற்றங்களில் பெரும் இழப்புகளை சந்தித்து வருகிறார் அதற்காக அரசு எங்களுக்கு எந்தவித நிவாரண உதவியும் செய்ததாக வரலாறு இல்லை தற்போது ரூபாய் 200 க்கு 350 சேனல்கள் பார்த்து வந்த மக்கள் இனி 100 சேனல்கள் மட்டுமே விருப்பப்பட்ட நான்கைந்து சேனல்கள் மட்டுமே பார்ப்பதற்கு 300க்கும் மேல் விலை கொடுக்க வேண்டியுள்ளது.
இந்த கட்டண முறை
பிப்ரவரி 1 2019 ஆம் தேதியிலிருந்து அமல்படுத்த உள்ளது மேலும் ஜிஎஸ்டி என்ற முறையில் 18% வரி சுமையை ஏற்றியுள்ளது விளம்பரங்கள் மூலம் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டக்கூடிய கார்ப்ரெட் சேனல்கள் மேலும் பணம் பெறும் சேனல் மூலமும் வருவாய் ஈட்டுவதற்கான அறிவித்துள்ளது மத்திய அரசின் கொள்கை முடிவு. பொதுமக்களையும் கடைக்கோடி ஆபரேட்டர்களின் வெகுவாக பாதிக்கிறது எனவே இந்த கொள்கையை வாபஸ் வாங்க வேண்டுமென 24 2019 அன்று காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இந்திய நாடு முழுவதும் கேபிள் ஒளிபரப்பு நிறுத்தம் செய்து போராட்டம் நடத்தத்திட்டமிட்டுள்ளோம். போராட்டத்திற்காக ஆபரேட்டர்கள் பொதுமக்கள் சேனல்கள் (எம் எஸ் ஓக்கல்) மக்கள் அனைவரும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம் மேலும் பொதுமக்களை பாதிக்கும் கேபிள் டிவி புதிய கட்டண முறை வாபஸ் வாங்க வேண்டும்.
ஜிஎஸ்டி வரி விதிக்காமல் முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
மாநில மொழி சேனல்களை இலவசமாக வழங்கவேண்டும். கார்ப்பரேட் சேனல்களுக்கு டிடிஎச் வழங்கும் சலுகைகளை திரும்ப பெற வேண்டும் பணம் பெறும் சேனல்களின் ஒளிபரப்பு கட்டணத்தை ஆபரேட்டர்களுக்கு 25% வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் அடிப்படை கட்டணமாக 55% முதல் 45% வரை 100 சதவீதமாக ஆபரேட்டர்களுக்கு வழங்க ஆவணம் செய்ய வேண்டுமென தமிழ்நாடு டிஜிட்டல் ஆப்ரேட்டர்கள் நல சங்க தலைவர் கருணாநிதி அவர்கள் கோரிக்கையும் வைத்தார்…