புதிய வார இதழ் துவங்கும் நடிகர் S.Ve.சேகர், சாத்தான் வேதம் ஓதுகிறதா..?
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பத்திரிகை துறை மற்றும் ஊடகத்தினர்களை பற்றி அவதூறாக பேசி இருந்த நடிகர் எஸ்.வி.சேகர், இந்நிலையில் தற்போது தனது குருநாதர் பெயர் வரும்படி சோ-ழி (சோழி- CHOZHI ) என்ற ஒரு புதிய வார இதழை விரைவில் துவங்குவதற்கு மத்திய அரசின் RNI – முறைப்படி பெயர் பதிவு செய்து அங்கிகாரம் வாங்கி உள்ளார் பத்திரிகை துறையினர்களை மிகவும் தாழ்த்தி அசிங்கமான முறையில் சில மாதங்களுக்கு முன் மூகநூலில் பதிவு செய்து விட்டு பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து நீதிமன்றம் வரை சென்றதும் நீதிமன்றம் இவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்ததும் அது தனது சொந்த கருத்து அல்ல நண்பர் ஒருவர் அனுப்பியதை படிக்காமல் அப்படியே முகநூலில் பதிவு செய்து விட்டேன் என்று கூறி ஊடகத்தினர்களிடம் மன்னிப்பு கேட்கிறான் என்றார் இந்த நிலையில் சாத்தான் வேதம் ஓதும் விதமாக தற்போது இவர் துவங்கும் புதிய வார இதழில் யார் வேலைக்கு போகிறார்கள் என்று பார்ப்போம் என்கிறார்கள் பத்திரிகை துறையை சார்ந்தவர்கள்…