நடிகை த்ரிஷா குறித்த சர்ச்சை பேச்சு – நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு!
நடிகை த்ரிஷா குறித்த சர்ச்சையாக பேசிய நடிகர் மன்சூர் அலிகான் மீது நுங்கம் பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான் மீது இரு பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தேசிய மகளிர் ஆணையம் நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி டிஜிபிக்கு அறிவுறுத்திய நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.