Fri. Jul 5th, 2024

கள்ளக்குறிச்சியில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியது!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உரிமைகள் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மகளிர் திட்டதுறையின் களப்பணியாளர்கள் மூலம் பிரத்யேக செயலியுடன் கூடிய திறன்பேசிகள் மூலம் கிராமங்கள் தோறும் மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து அவர்களின் தரவுகளை பதிவு செய்யும் வகையிலான பணிகள் தொடர்பாக முதற்கட்ட பயிற்சியாக பயிற்றுனர்களுக்கான பயிற்சி திட்ட அலுவலர் மகளிர் திட்டம் சுந்தர்ராஜன் ,மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் க.சுப்பிரமணி, திட்ட அலுவலர் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பழனிசாமி மாநில உரிமைகள் திட்ட அலுவலர். மேரி திவ்யா. தலைமையில் பயிற்சியாளர்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது.

கிராம புறத்திற்கான பயிற்சியாளர்கள் 11 நபர்கள் நகர்புறத்திற்கான 3 நபர்கள் என 15 மகளிர் திட்ட சிறப்பு களப்பணியாளர்களுக்கு கணக்கெடுப்பு களப்பணியாளர்களுக்கு பயிற்சியாளராக பணியாற்ற தேவையான பயிற்சிகளை மாஸ்டர் பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சி பெற்றவர்கள் வட்டார இயக்க அலுவலகங்கம் வாரியாக கிராமங்களுக்கான கணக்கெடுப்பு பணி செய்ய தெரிவு செய்யப்பட்ட மகளிர திட்ட களப்பணியாளர்களுக்கு பயிற்சி யளிக்கவுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 436 களப்பணியாளர்கள் கிராம புறங்களுக்கும் நகர் புறங்களிலும் மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கு நேரில் சென்று பிரத்யேக செயலி கொண்ட திறன்பேசிகள் மூலமாக மாற்றுத்திறனாளிகளின் தரவுகளை பெற்று பதிவு செய்வார்கள் 24 நவம்பர் மாதம் தொடங்கி டிசம்பர் மாத்தத்திற்குள் கணக்கெடுப்பு பணிகள் நிறைவடைய உள்ளது.

இப்பயிற்சியில் உதவிதிட்ட அலுவர் மகளிர் திட்டம் வெங்கட்.அவர்கள் முடநீக்குயல் வல்லுனர் பிரபாகரன் உடனிருந்தனர்.

செல்வராஜ் – செய்தியாளர்