Thu. Dec 19th, 2024

உளுந்தூர்பேட்டையில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

உளுந்தூர்பேட்டையில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை சென்னை தலைமை செயலகத்திலிருந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அடுக்குமாடி குடியிருப்பில் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜெ மணிக்கண்ணன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு துணைத் தலைவர் வைத்தியநாதன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் டேனியல்ராஜ், முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜெயசங்கர் நகராட்சி ஆணையர் இளவரசன் பொறியாளர் சாம்பசிவம் மற்றும் திருநாவலூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் சாந்தி இளங்கோவன் மாநில பொதுக்குழு உறுப்பினர் செல்லையா, விசிக நகர செயலாளர் எம் எஸ் முருகன் நகர மன்ற உறுப்பினர்கள் ஜெயந்தி, மதியழகன், கலா, சுந்தரமூர்த்தி, செல்வகுமாரி, ரமேஷ்பாபு, முருகவேல், சிவசங்கரி, சந்திரகுமார், பூங்குழலி, தினேஷ் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

செல்வராஜ் – செய்தியாளர்