Thu. Dec 19th, 2024

கந்தர்வகோட்டையில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான விழிப்புணர்வு பேரணி!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றியம் நடுநிலைப் பள்ளியில் கந்தரவகோட்டையில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.இப்பேரணியை வட்டாரக் கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரி தொடங்கி வைத்தார்.

தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் பிரகாஷ் அனைவரும் வரவேற்றார். ஒவிய ஆசிரியர் கலியபெருமாள்,இல்லம் தேடிக் கல்வி மையம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா, ஆசிரியர்கள் சாந்தி , பாக்கியராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இப்பேரணியில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் 0-18 வயதுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் குறித்து விழிப்புணர்வு பேரணி கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தொடங்கி பேருந்து நிலையம் வரை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு அரசு வழங்கக்கூடிய அடையாள அட்டைகளை பெறுவது, கல்வி கல்வி உதவித்தொகை, பேருந்து ரயில் பயண சலுகைகள், அரசின் வேலைவாய்ப்புகள், மாற்றுத்திறன் மாணவர்களுக்கான உபகரணங்கள் உபகரணங்கள் வழங்குவது, மாற்றுத்திறன் குழந்தைகளை கண்டறிவது, அடையாள அட்டை வழங்குவது உள்ளிட்ட பலன்களை பெறுவதற்கு மாற்றுத்திறன் அடையாள அட்டை மிகுந்த பயன் அளிப்பதாக இருக்கும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் வருகிற 21/11/2023 அன்று மாற்று திறன் மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் கந்தர்வகோட்டை ஒன்றிய அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது அனைத்து மாணவர்களும் பொது மக்களும் தங்கள் இருப்பிடங்களில் உள்ள மாற்றுத்திறன் குழந்தைகள் இருந்தால் முகாமில் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு பேரணி நடைபெற்றது.

இந்நிகழ்வினை இயன்முறை மருத்துவர் சரண்யா, மாற்றுத்திறன் கொண்ட சிறப்பு ஆசிரியர்கள் அறிவழகன்,ராதா, ரம்யா, ராணி, லீலா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

அமானுல்லா புதுக்கோட்டை