Thu. Dec 19th, 2024

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாக்குமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.