Thu. Dec 19th, 2024

17.11.2023 இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

நண்பர்களின் சந்திப்பால் அனுகூலப் பலன் உண்டாகும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் சாதகப் பலன்கள் கிடைக்கும்.

ரிஷபம்

நீங்கள் எந்த விஷயத்திலும் கவனமுடன் இருக்க வேண்டும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பொறுமையுடன் இருப்பது நல்லது.

மிதுனம்

பிள்ளைகளால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத வகையில் லாபங்கள் உண்டாகும். சேமிப்பு உயரும்.

கடகம்

உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். புதிய வாய்ப்புகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

சிம்மம்

வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் பெற்றோரிடம் வீண் மனஸ்தாபங்கள் உண்டாகும். மனஅமைதி குறையும்.

கன்னி

உங்களுக்கு உற்றார் உறவினர்களால் மனஅமைதி குறையும். சுபகாரிய முயற்சிகளில் சில இடையூறுகள் உண்டாகும்.

துலாம்

உங்களுக்கு பணவரவிற்கு பஞ்சம் இருக்காது. குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும்.

விருச்சிகம்

நீங்கள் பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்படலாம். உத்தியோகத்தில் பிரச்சினைகள் ஓரளவுக்கு குறையும்.

தனுசு

நீங்கள் எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து முடிப்பீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.

மகரம்

செய்யும் செயல்களில் சற்று மந்த நிலை ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கடன் பிரச்சினை தீரும்.

கும்பம்

பிள்ளைகள் வழியில் பெருமை உண்டாகும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கொடுத்த கடன்கள் வசூலாகி மகிழ்ச்சியை தரும்.

மீனம்

உடல் ஆரோக்கியம் சிறப்படைந்து சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். உடன்பிறந்தவர்களுடன் இருந்த பிரச்சினைகள் தீரும்.