50 சதம் அடித்து உலக சாதனை படைத்தார் விராட் கோலி!
இன்று மும்பையில் நடைபெற்று வரும் இந்தியா-நியூசிலாந்து இடையிலான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 50 சதம் அடித்து உலக சாதனை படைத்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி.
ஒரு நாள் கிரிக்கெட்டில் சதங்களின் உச்சத்தை எட்டியதற்காகவும், சிறப்பான சதத்தை எட்டியதற்காகவும் விராட் கோலிக்கு சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
மேலும், சச்சின் சொன்னதை விராட் கோலி செய்து காட்டியுள்ளார்.