Tue. Mar 11th, 2025

உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம் – தமிழகத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும்.

தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வரும் 16ம் தேதி ஒடிசா கடற்கரை நோக்கி நகர கூடும்.

நேற்று 7 இடங்களில் மிக கனமழையும், 31 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளன.

அடுத்த 3 தினங்களுக்கு தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.