Tue. Mar 11th, 2025

எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம்- சபாநாயகர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்கும்படி சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனு சட்டமன்ற செயலாளர், சபாநாயகர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சித் துணைத்தலைவர், துணைச் செயலாளராக அங்கீகரிக்க கோரி சபாநயகருக்கு 20 முறை நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இருக்கை மாற்றம் தொடர்பாக இதுவரை சபாநாயகர் முடிவெடுக்கவில்லை என்று ஈபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.