Mon. Jul 8th, 2024

அதிகாரத்தை ஆளுநர் தவறாக பயன்படுத்தி உள்ளார் – உச்சநீதிமன்றம்

பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் நிறுத்திவைக்க முடியாது என்று உச்சநீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தெரிவிக்கையில்,

அரசியல் சாசன பிரிவு 200, 163 வழங்கிய அதிகாரத்தை ஆளுநர் தவறாக பயன்படுத்தி உள்ளார். 12 மசோதாக்கள், 3 துணை வேந்தர்கள் நியமனம் மற்றும் உத்தரவு முடக்கப்பட்டுள்ளது.

மசோதாக்கள் எத்தனை நாட்களாக நிலுவையில் உள்ளன? மசோதாக்கள் எப்போது தாக்கல் செய்யப்பட்டன.

கடந்த 2 ஆண்டுகளாக பேரவையில் நிறைவேற்றிய மசோதாக்கள் நிலுவையில் உள்ளன.

சிறைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பான கோப்புகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. as soon as possible என்பதை ஆளுநர் தவறாக புரிந்து கொண்டு செயல்படுகிறார்.

அரசு பணிகளில் 14 முக்கிய பணிகளுக்கான காலி பணியிடங்களில் 10 பணியிடங்கள் ஆளுநரால் நிரப்பப்படாமல் உள்ளன. டிஎன்பிஎஸ்சி தலைமை நியமன கோப்பு ஆளுநரிடம் நிலுவையில் உள்ளன. மசோதாக்கள் குறித்து எந்த பதிலும் கூறாமல் ஆளுநர் நிலுவையில் வைத்துள்ளார்.

பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைக்க முடியாது என்று உத்தநீதிமன்றம் தெரிவித்துள்ளது.