Tue. Mar 11th, 2025

அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்!

பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமர் பிரசாத் வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சேதப்படுத்தப்பட்ட ஜேசிபி வாகன உரிமையாளருக்கு ரூ.12 ஆயிரம் வழங்க வேண்டும்.

55 அடி உயர கொடி கம்பம் வைப்பது முட்டாள் தனமான முடிவு. காக்கா குருவி தான் உட்கார கொடி கம்பம் பயன்படும். மக்களின் கண்ணுக்கு கொடி தெரியவே தெரியாது.

மாநகராட்சிக்கு சொந்தமான சம்பந்தப்பட்ட இடத்தில் மீண்டும் கொடிக்கம்பம் அமைக்க மாட்டோ என்று பிரமான பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.