Thu. Dec 19th, 2024

மழை பாதிப்புகளை எதிர்கொள்வோம் – தமிழ்நாடு காவல்துறை

மாநிலத்தில் மழை பாதிப்பு மீட்பு பணிகளை மேற்கொள்ள, 18 பேரிடர் மீட்பு குழுக்கள் தயாராக உள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

காவல் ஆய்வாளர், உதவி ஆய்சவாளர் உட்பட 30 பேர் கொண்டதாக ஒவ்வொரு பேரிடர் மீட்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்பு தற்போது அதிகம் உள்ள நீலகிரி, கோவை, நெல்லை உட்பட மாவட்டங்களில் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் தயாராக உள்ளனர்.