10.11.2023 இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
உங்களுக்கு அதிகாலையிலே சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மன மகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளால் உங்கள் மதிப்பு உயரும்.
ரிஷபம்
உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக மருத்தவ செலவுகள் ஏற்படலாம். உறவினர்கள் வழியில் சிறு சிறு மனச்சங்கடங்கள் ஏற்படும்.
மிதுனம்
உங்களக்கு உறவினர்களுக்கு மனநிம்மதி குறையும். தொழில் ரீதியான புதிய முயற்சிகளில் சிறு இடையூறுக்குப் பின் அனுகூலமான பலன் கிட்டும்.
கடகம்
நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் நற்பலன் உண்டாகும்.
சிம்மம்
நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகலாம். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும்.
கன்னி
நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
துலாம்
உங்களுக்கு பணவரவு சுமாராகத்தான் இருக்கும். பணிபுரிபவர்களுக்கு உத்தியோகத்தில் அதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படலாம்.
விருச்சிகம்
உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
தனுசு
குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகளால் அனுகூலப் பலன் உண்டாகும்.
மகரம்
நீங்கள் நினைத்த காரியத்தை செய்வதில் சில இடையூறுகள் உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களுடன் சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும்.
கும்பம்
உங்கள் ராசிக்கு சந்தராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மனகுழப்பம் ஏற்படும். மற்றவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது.
மீனம்
உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். கடன் பிரச்சினைகள் தீரும். குடும்பத்தில் அமைதி நிலவும்.