Thu. Dec 19th, 2024

தீபாவளி போனஸ் வழங்குவதில் பாகுபாடு – எடப்பாடி பழனிச்சாமி

தீபாவளி போனஸ் வழங்குவதில் பாகுபாடு உள்ளதாக தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கு 20% தீபாவளி போனஸ் மற்றும் கருணைத்தொகை அறிவித்துவிட்டு, கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு 10% மட்டும் போனஸ் அறிவிக்கப்பட்டது ஏற்கத்தக்கதல்ல. கூட்டுறவு வங்கி பணியாளர்களுக்கான தீபாவளி போனஸை 20% ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.