ஓட்டேரியில் ரவுடி அப்பு சரமாரியாக வெட்டிக் கொலை…!!!
சென்னை ஓட்டேரி பகுதியில் பல வழக்குகளில் தொடர்புடைய ரவுடி அப்பு(எ) தினேஷ் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது செம்பியம் பகுதியைச் சேர்ந்தவர் அப்பு மீது 3 காவல் நிலையங்களில் வழிப்பறி, கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன இந்நிலையில் இன்று இரவு முன்விரோதம் காரணமாக சென்னை ஓட்டேரி பகுதியை அடுத்த பென்னி மில் அருகே ரவுடி அப்புவை சிலர் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர் ரத்த வெள்ளத்தில் கிடந்த அப்பு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் சம்பவ இடத்திற்கு வந்த ஓட்டேரி காவல் துறையினர் ரவுடி அப்புவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த கொலை சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளான சதீஷ் குமார் மற்றும் சசிகுமார் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர் மேலும் 4 பேரை தேடி வருகின்றனர் முதற்கட்ட காவல் துறையினர் நடத்திய விசாரணையில் கடந்த 2012ம் ஆண்டு ரவுடி அப்பு என்கிற தினேஷ், சதீஷ் குமார் மற்றும் சசிகுமாரின் சகோதர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டு சிறைக்கு சென்று வந்தவர் கடந்த 6 மாதத்துக்கு முன்பு இவர் வேறொரு வழக்கில் கைதாகி இரண்டு தினங்களுக்கு முன்பு தான் சிறையில் இருந்து வெளியில் வந்திருக்கிறார் சகோதரன் கொலைக்கு பழி வாங்குவதற்காக சதீஷ் குமார் மற்றும் சசிகுமார் ஆகியோர் 4 பேர் துணையுடன் ரவுடி அப்புவை கொலை செய்தது தெரிய வந்துள்ளது…பேராண்மை க்ரைம் நிருபர்…