Fri. Jul 5th, 2024

(09.11.2023) இன்றைய ராசிப்பலன்கள்!

மேஷம்

பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை கூடும். உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.

ரிஷபம்

உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் மனஅமைதி குறைவதற்கான சூழ்நிலை உருவாகும்.

மிதுனம்

உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் தோன்றும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

கடகம்

குடும்பத்தில் சுபசெலவுகள் செய்யக்கூடிய சூழ்நிலை உண்டாகும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சி தரும்.

சிம்மம்

உங்கள் உடல் நிலையில் சற்று மந்த நிலை உண்டாகலாம். பிள்ளைகளுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். எதிலும் நிதானம் தேவை.

கன்னி

நீங்கள் கடினமான காரியத்தை கூட திறமையுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

துலாம்

நீங்கள் செய்யும் செயலில் உற்சாகமின்றி காணப்படுவீர்கள். நண்பர்களுடன் சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.

விருச்சிகம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

தனுசு

உங்களுக்கு பொருளாதார சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் அனுகூலப் பலன் உண்டாகும்.

மகரம்

உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகலாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு மனஸ்தாபங்கள் தோன்றும்.

கும்பம்

நீங்கள் செய்யும் செயல்களில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனஅமைதி குறையும்.

மீனம்

நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றியில் முடியும். சுப முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்பட்டு மகிழ்ச்சி நிலவும்.