ஓபிசி மக்களின் முதல் எதிரியே பாஜகதான் – திருமாவளவன் காட்டம்!
ஓசி மக்கள் முதல் எதிரியே பாஜகதான் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில்,
ஓபிசி மக்கள் மற்றும் இந்து மக்களின் முதல் எதிரியே பாஜகதான். மக்களிடம் இயல்பாக இருக்கின்ற மத உணர்வை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுகின்ற மோசமான அரசியலை பாஜக, ஆர்எஸ்எஸ் தொடர்ந்து செய்கிறது. ஓபிசி சமூகங்களைச் சார்ந்த இந்துக்கள் உணர வேண்டும்.
எல்லா பாதிப்புக்கும் பிஜேபி அரசு தான் காரணம் என்பதை ஓபிசி மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். பாஜக எந்த காலத்திலும் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வராது. இது அவர்களுக்கே தெரியும் என்றார்.