Thu. Dec 19th, 2024

புதுக்கோட்டையில் கலைஞர் நூற்றாண்டு விழா – பள்ளி மாணவ மாணவியருக்கான போட்டி

புதுக்கோட்டை:புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா பள்ளி மாணவ மாணவியருக்கான கவிதைகள் – திரைப்பட வசனங்கள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது.

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் புதுக்கோட்டை நகர்மன்றத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா பள்ளி மாணவ மாணவியருக்கான கவிதைகள் – திரைப்பட வசனங்கள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது.

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் தலைமை வகித்தார், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட வடக்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் செந்தாமரை பாலு வரவேற்புரையாற்றினார்.

விழாவினை சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சரும், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.ரகுபதி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வுகளில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கவிச்சுடர் கவிதைப்பித்தன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணைச் செய்லாளர், மண்டல பொறுப்பாளர் திருச்சி எழில்மாறன் செல்வேந்திரன், டாக்டர் வை.முத்துராஜா எம்.எல்.ஏ. த.சந்திரசேகரன், புதுக்கோட்டை விஜயா அஞ்சுகா மீனாட்சிசுந்தரம், எம்.எம்.பாலு,சுப.சரவணன், செ.அசோக்பாண்டியன், வி.என்.மணி, கே.ஆர்.என்.போஸ், அரு.வீரமணி, எஸ்.எஸ்.கருப்பையா, க.மதியழகன்,பி.ராஜேஸ்வரி, எம்.லியாகத்அலி, ஆ.செந்தில், சு.சண்முகம், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அமானுல்லா புதுக்கோட்டை