நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்களுக்கு போனஸ் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக C, D பிரிவு பணியாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் கருணைத் தொகையாக வழங்க ஆணை பிறபிக்கப்பட்டுள்ளது.
நவீன அரிசி ஆலைகள், கிடங்குகள், நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மற்றும் திறந்தவெளி சேமிப்பு மையங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் சுமார் 49,023 பணியாளர்கள் பயடைய உள்ளனர்.