Thu. Dec 19th, 2024

இலங்கையில் 4 தமிழக மீனவர்கள் விடுதலை!

கடந்த 14ம் தேதி கைது செய்யப்பட்ட 12 ராமேஸ்வரம் மீனவர்களில் 4 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எஞ்சிய 8 மீனவர்களை நவம்பர் 15ம் தேதி யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க இலங்கை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த மாதம் 28ம் தேதி கைது செய்யப்பட்ட 14 மீனவர்களுக்கு நவம்பர் 15ம் தேதி வரை காவல் நீடிக்கப்பட்டுள்ளது. ஒரு விசைப்படகை அரசுடைமையாக்கி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.