ஒரே நாளில் கோடீஸ்வரரான விவசாயி!

பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரைச் சேர்ந்தவர் ஷீத்தல் சிங். இவர் விவசாயம் செய்து வருகிறார்.
இந்நிலையில், இவர் ஹோஷியார்பூர் நகரில் உள்ள மெடிக்கல் ஸ்டோருக்குச் சென்று லாட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார்.
அந்த லாட்டரி டிக்கெட்டில் இவருக்கு ரூ.2.5 கோடி பரிசு விழுந்தது.
இதனால், ஒரே நாளில் விவசாயி ஷீத்தல் சிங் கோடீஸ்வரரானார்.
தற்போது இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.