Mon. Jul 8th, 2024

தீபாவளி பண்டிகை முன்னிட்டு களைக்கட்டிய புதுக்கோட்டை மாட்டுச்சந்தை!

தீபாவளி பண்டிகை முன்னிட்டு களைக்கட்டிய புதுக்கோட்டை மாட்டுச்சந்தை நடைபெற்றதில் சுமார் ரூ.3 கோடிக்கு மேல் வியாபாரிகள் லாபம் அடைந்துள்ளனர்.

விவசாயிகளுக்கு போதுமான வருமானம் இல்லாததால் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக தாங்கள் வளர்த்து வந்த மாடுகளை விற்ற விவசாயிகள்

புதுக்கோட்டை சந்தைப்பேட்டையில் உள்ள வாரச்சந்தையில் புதன்கிழமை தோறும் மாட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். அதிகாலை 4 மணி முதல் நடைபெறும் மாட்டுச் சந்தையில் புதுக்கோட்டை சுற்றியுள்ள ஆதனக்கோட்டை கரம்பக்குடி ஆலங்குடி அறந்தாங்கி பொன்னமராவதி கீரனூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான மாடுகள் இங்கு விற்பனைக்கு வந்தன அதிகாலை 4 மணி முதல் நடைபெற்ற இந்த வர்த்தகத்தில் சுமார் 3 கோடி ரூபாய் அளவிற்கு மாடுகள் விற்பனையாகின.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதன்கிழமை நடைபெற்ற மாட்டுச்சந்தையில் 300-க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனை கொண்டுவரப்பட்டது
தீபாவளி பண்டிகை நெருங்கி வருகின்ற நேரத்தில் விவசாயிகளிடம் போதுமான அளவு வருமானம் இல்லாததால் தங்கள் கால்நடைகளை சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர்

மேலும் இன்று நடைபெற்ற வார சந்தையில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாடுகள் அடிமாடுகளாக விற்பனை செய்யப்பட்டு கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

அதே சமயம் இன்று விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட பசுமாடுகள் குறைந்தபட்சம் 15 ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரையும் காளை மாடுகள் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரையும் விற்பனையாகின புதுக்கோட்டையில் புதன்கிழமை தோறும் நடைபெறும் மாட்டுச் சந்தையும் வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் ஆண்டு சந்தைக்கும் ஒரே இடத்தில் நடைபெற்று வருவதால் அந்த பகுதியில் அடிப்படை வசதிகளும் உயர்மின் விளக்கு கோபுரங்களும் அமைத்து தர வேண்டும் என்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமானுல்லா புதுக்கோட்டை