Thu. Dec 19th, 2024

திருவரங்குளத்தில் 31-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு – அமைச்சர் எஸ்.ரகுபதி துவக்கி வைத்தார்!

திருவரங்குளம் அருகே புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் 31-வது தேசிய குழந்தைகள் அறிவியல் கிழக்கு மண்டல அளவிலான மாநாடு அமைச்சர் எஸ்.ரகுபதி துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கமும், மத்திய அரசின் விஞ்ஞான தொழில்நுட்பத் துறையின் ஒரு பிரிவான தேசிய அறிவியல் தொழில்நுட்ப பரிமாற்றத் துறையுடன் இணைந்து தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை நடத்தி வருகிறது

31-வது தேசிய குழந்தைகள் அறிவியல் கிழக்கு மண்டல அளவிலான மாநாடு புதுக்கோட்டை திருவரங்குளம் அருகிலுள்ள புஷ்கரம்
வேளாண் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

இம்மாநாட்டின் துவக்கவிழா தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்டத் தலைவர் ம. வீர முத்து தலைமையிலும், புஷ்கரம் வேளான் அறிவியல் கல்லூரி இயக்குநர் முனைவர் ஆர்.துரை, செயலாளர் நிர்வாக அலுவலர் எம்.ராஜாராம் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. விழாவில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கலந்து கொண்டு தானியங்கி விதை எந்திரத்தை திறந்துவைத்து, மண்டல மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்.

புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா கருத்துரை வழங்கினார். மாநிலச் செயலாளர் எம்.எஸ். ஸ்டீபன் நாதன் அறிமுக உரையாற்றினார்.

மாநில பொருளாளர் ஆர்.ஜீவானந்தம், மாநிலத் துணைத் தலைவர் எம்.மாணிக்கத்தாய், புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி மேலாளர் ஆர்.நெப்போலியன், பேராசிரியர் ஆயிஷா சித்திக்கா, முனைவர் செல்வஅன்பரசு, கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ். ரகுராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மாநாட்டில் பங்கேற்ற 200-க்கும் மேற்பட்ட வழிகாட்டி ஆசிரியர்களுக்கு மாவட்ட குழந்தைகள் நலக் குழுத் தலைவர் க.சதாசிவம் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது.

அறிவியல் பார்வையில் சுற்றுச்சூழல் என்ற தலைப்பில் மாநிலதுணைத் தலைவர் வி.சேதுராமன், அறிவியல் பார்வையில் கல்வி என்ற தலைப்பில் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் அ.மணவாளன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.

நிறைவு விழா மாநில ஒருங்கிணைப்பாளர் முனைவர் வி.சுகுமாரன் தலைமையில் நடைபெற்றது. மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர் அருண்விவேக் வரவேற்பு உரையாற்றினார்.

இம்மாநாட்டில் கிழக்குமண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்களில் இருந்து 145 ஆய்வுக் கட்டுரைகள்மாணவர்கள் சமர்ப்பித்தார்கள். 300க்கும் மேற்பட்ட குழந்தைகள்விஞ்ஞானிகள், 200க்கும் மேற்பட்ட வழிகாட்டி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

மாவட்ட அளவில் நடைபெற்று மண்டல இரவில் பங்கேற்ற மாநாட்டில் இருந்து 47 சிறந்த ஆய்வுக் கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டது. தேர்வு செய்யப்பட்டு,சிறந்த ஆய்வு கட்டுரைகள் கோவை மாவட்டத்தில் நவம்பர் 25,26 தேதிகளில் நடைபெற உள்ள தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநில மாநாட்டில் பங்குபெற இருக்கிறார்கள்.

தேர்வு செய்யப்பட்ட ஆய்வு அறிக்கைகளை எஸ்.ஞானசேகரன், எல்.முருகன், ராஜசேகரன், சி.ஷோபா ஆகியோர்
அறிவித்தனர்.

முனைவர் லேகா பிரியங்கா, முனைவர் பி.ஜெய்சங்கர் ஆகியோர் குழந்தைகள் ஆய்வு கட்டுரைகள் குறித்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

கவிஞர் தமிழ் செம்மல் தங்கம்மூர்த்தி இஸ்ரோ விஞ்ஞானி எழுதிய ஏவூர்த்தி மற்றும் ட்ரான்ஸ்போர்ட் சிஸ்டம் ஆகிய நூல்களை வெளியிட்டு தேர்வு செய்யப்பட்ட சிறந்த ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பித்த குழந்தை விஞ்ஞானிகளுக்கு சான்றிதழும் நினைவு பரிசும் வழங்கி சிறப்பித்தார்.

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் ஆய்வறிக்கை தொகுப்பை மாநிலச் செயலாளர் எஸ். டி.பாலகிருஷ்ணன் சமர்ப்பித்தார். இறுதியாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இரா.ராமதிலகம் நன்றி கூறினார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 6 சிறந்த ஆய்வுக்கட்டுரைகள்
தேர்வு செய்யப்பட்டது, வல்லவாரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கிருஷ்ணன், மேல்மங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி – இயலினி,புதுக்கோட்டை சந்தைப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி – கீர்த்திஸ்ரீ,
புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி
பா.உ.தியானோ, கிர்த்திகா, புதுக்கோட்டை அரசு
உயர்துவக்கப்பள்ளி கிஷோர்குமார், திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி – முஹமது பயாஸ், முகமது அப்சர் குழுவினர்களின் ஆய்வுக்கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டது.

அமானுல்லா புதுக்கோட்டை