Sat. Apr 12th, 2025

இந்த மனசு தான் சார் கடவுள்…. – ஆப்பிரிக்க நாடுகளில் 100 போர் கிணறுகள் அமைத்து கொடுத்த பிரபல யூடியூபர்!

கென்யா, ஜிம்பாப்வே உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் சுமார் 50000 மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கும் வகையில், 100 பேர் கிணறுகள் அமைத்து உதவியுள்ளார் பிரபல யூடியூபரான MrBeast எனப்படும் ஜிம்மி டோனல்ட்சன்.

கென்யாவில் உள்ள பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பது, ஆற்றை கடப்பதற்கான தொங்கு பாலம் அமைப்பது உள்ளிட்ட வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார். இப்பணிக்களுக்காக பல்வேறு அமைப்புகளிடமிருந்து சுமார் ரூ.2.5 கோடி நிதி திரட்டியுள்ளார்.