Mon. Jul 8th, 2024

உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி – சென்னை வானிலை ஆய்வு மையம்!

மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி,

மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. தென்கிழக்கு அரபிக் கடல் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதியில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
ராயலசீமா மற்றும் கடலோர கர்நாடகா பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று முதல் நவம்பர் 9ம் தேதி வரை கேரளா மற்றும் மாஹே பகுதிகளில் கனமழை பெய்யும் என்று அதில் குறிப்பிட்டுள்ளது.