Mon. Jul 8th, 2024

தீபாவளி முன்னிட்டு நவ.9 முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் – அமைச்சர் சிவசங்கர்!

தீபாவளி முன்னிட்டு நவ.9 முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில்,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் 16 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொதுமக்கள் எந்தவித சிரமமும் இன்றி சொந்த ஊர்களுக்கு சென்று மீண்டும் திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிக்க தடை செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வழக்கமான கட்டணத்தை விட 30% குறைந்த கட்டணம் வசூலிக்க ஆம்னி பஸ் உரிமையாளர்களுடன் பேசி முடிவு செய்யப்படும் என்றார்.