ஓட்டுநர், நடத்துனரை ஆபாசமாக பேசிய நடிகை ரஞ்சனா நாச்சியார் கைது!

தன்னை போலீஸ் என கூறிக்கொண்டு, அரசு பேருந்தில் தொங்கியபடி பயணித்த மாணவர்களை தாக்கி, ஓட்டுநர், நடத்துனரை ஆபாசமாக பேசிய பாஜக பிரமுகரும் துணை நடிகையுமான ரஞ்சனா நாச்சியாரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அரசு பேருந்தை தடுத்து நிறுத்தியது, மாணவர்களை தாக்கியது, ஆபாசமாக பேசியது, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட 5 பிரிவுகளில் நடிகை நாச்சியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.