Mon. Jul 8th, 2024

என்னை ‘மை லார்ட்’ என்று அழைப்பதை நிறுத்தினால் பாதி சம்பளம் தருகிறேன் – நீதிபதி நரசிம்மா!

“நீதிபதிகளை ‘மை லார்ட்’ என அழைப்பதை நிறுத்துங்கள் என்று உச்சநீதிமன்ற நீதிபதி நரசிம்மா தெரிவித்துள்ளார்.

நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் வாதங்களை முன் வைக்கும்போது, நீதிபதிகளை ‘My Lordship’ என அழைப்பது வழக்கம்.

கடந்த 2006ல் இந்திய பார் கவுன்சில், எந்தவொரு வழக்கறிஞரும் நீதிபதிகளை, ‘மை லார்ட்’ என அழைக்கத் தேவையில்லை என தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால்,இது நடைமுறையில் பின்பற்றப்படுவதில்லை.

இந்நிலையில், “நீதிபதிகளை ‘மை லார்ட்’ என அழைப்பதை நிறுத்துங்கள் என்று உச்சநீதிமன்ற நீதிபதி நரசிம்மா தெரிவித்துள்ளார்.

இது குறித்து நீதிபதி பேசுகையில்,

நீதிபதிகளை ‘மை லார்ட்’ என அழைப்பதை முதலில் நிறுத்துங்கள். எத்தனை முறை நீங்கள் அவ்வாறு அழைப்பீர்கள்? அதற்கு பதிலாக சார் என அழைக்கலாம். நீங்கள் மை லார்ட் என்று அழைப்பதை நிறுத்தினால் என் சம்பளத்தில் பாதியை உங்களுக்கு தருகிறேன்.

வழக்கறிஞர் ஒருவர் வழக்கு விசாரணையின்போது வழக்கறிஞர் ஒருவருக்கு நீதிபதி நரசிம்மா அறிவுரை கூறினார்.