Fri. Dec 20th, 2024

கிங்ஸ் பொறியியல் கல்லூரி | தேசிய அளவில் | கிங்ஸ் கார்டியன் சாம்பியன் ஷிப் 2019 | peranmai news

நேற்று (11-01-2019) சென்னை இருங்காட்டுக் கோட்டையில் உள்ள கிங்ஸ் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான கிங்ஸ் கார்டியன் சாம்பியன்ஷிப் 2019 போட்டிகள் நடைபெற்றது.

தென்னிந்தியா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இருந்து 20 உறுப்பினர்கள் கொண்ட 23 குழுக்கள் புதிதாக வடிவமைக்கப்பட்ட தாங்கள் கோ -கார்ட் வாகனங்களுடன் கலந்து கொண்டனர்.

பைக் ஸ்டண்ட் மற்றும் கார் பந்தயம் நடைபெற்றது.

இப்போட்டிகளை கல்லூரி தலைவர் திருமதி நளினி செல்வராஜ் அவர்கள் துவங்கி வைத்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கினார். முதல் பரிசு ரூபாய் 2 லட்சம் இரண்டாம் பரிசு 50000 மேலும் சிறந்த வாகனம் வாகன ஓட்டிகள் 10 பேருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் அணியின் தலைவர்களுக்கும் தனித்தனி திறன் சார்ந்த பரிசுகளும் வழங்கப்பட்டது

இதில் சிறப்பு விருந்தினராக  மிர்ச்சி சிவா அவர்கள். கலந்து கொண்டு கலந்து கொண்டு அனைத்து மாணவர்களையும் பாராட்டி பேசினார்.   இப்போட்டிகள் பொறியியல் கல்லூரி மாணவர்களின் புதுமையான மற்றும் ஆக்கபூர்வமான திறனை வெளிப்படுத்த பயன்பட்டது.