காசா நகரத்தை சுற்றி வளைத்து இஸ்ரேல் ராணுவ படை!
கடந்த ஒரு மாதமாக இஸ்ரேலுக்கும், காஸாவிற்கும் இடைய போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில், ஹமாஸ் போராளிகளுடன் நேருக்கு நேர் சண்டையில் ஈடுபட்ட IDF வீரர்கள் காசா நகருக்குள் நுழைந்தபோது இஸ்ரேலியப் படைகள் காஸாவிலுள்ள இலக்குகளை வான் மற்றும் தரையிலிருந்து தாக்கின.
இரட்டைக் குடியுரிமை கொண்ட அமெரிக்கர்கள் குறைந்தது 74 பேர் காஸாவிலிருந்து எகிப்திற்குள் நுழைந்துள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், காசா நகரத்தை இஸ்ரேல் ராணுவ படை சுற்றி வளைத்துள்ளது.
இஸ்ரேல் தற்போது காசா நகரின் தெற்கே கடற்கரையை அடைந்துள்ளது.
காசா பகுதியின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைக்கும் கடைசி பாதையை மூடியுள்ளது.
காசா நகரத்தை #இஸ்ரேல் திறம்பட சுற்றி வளைத்துள்ளது.