பாஜகவின் ஒரு அணிதான் ஐ.டி. – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
பாஜகவின் ஒரு அணிதான் ஐ.டி. என்று அமைச்சர் உதயநிதி விளாசி உள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாஜகவின் அணிகளாக அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை உள்ளன. தேர்தல் நெருங்குவதால் சோதனைகள் அதிகரித்துள்ளன. நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தை அனைத்து கட்சிகளும் ஆதரிக்க வேண்டும். நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்திற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் கையெழுத்து பெற்றபின் அமைச்சர் உதயநிதி பேசினார்.