12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில்,
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, குமரி, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும். சென்னையில் 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும்.