Thu. Dec 19th, 2024

எஸ்.ஐ. உட்பட 3 போலீசார் சஸ்பெண்ட் – உயர்நீதிமன்றம் அதிரடி!

பொது இடத்தில் சாதி பெயரை குறிப்பிடு கணவன்-மனைவி மற்றும் மகனை கண்மூடித்தனமாக தாக்கிய உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 3 காவலர்களை சஸ்பெண்ட் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கம் அருகே பட்டியலினத்தை சேர்ந்த ராஜா அவரது மனைவி, மகன் மீது போலீசார் தாக்குதல் நடத்தினார்.

உதவி ஆய்வாளர் முருகன், காவலர்கள் நம்மாழ்வார் மற்றும் விஜயகுமார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட மூவருக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும். இழப்பீட்டை காவலர்களிடம் இருந்து வசூலித்து, 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து 12 வாரங்களில் விசாரணையை முடிக்க நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டுள்ளார்.