Fri. Dec 20th, 2024

நித்யானந்தா வழக்கில் மதுரை ஆதீனம் பதிலளிக்க வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு!

293-வது மதுரை ஆதீனமாக ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகளை மதுரை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதற்கு எதிராக நித்யானந்தா சீராய்வு மனு தாக்கல் செய்தது.

இது தொடர்பான மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி, மனுதாரரின் மனு குறித்து தற்போதைய மதுரை ஆதீனம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்டோர் பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி இந்த விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.