Fri. Dec 20th, 2024

ஸ்டெர்லைட் ஆலையை மூட போரடி உயிர் இழந்தவர்களின் குடும்பங்கள் இன்று சென்னை சேப்பாக்கத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்…

பதினைந்து பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் பலர் இன்னும் ஊனமாக கிடக்கின்றனர் அவர்களின் இரத்தம் காய்வதற்குள் திறக்கின்றனர் இது நியாயமா…?

இதுவரை உயிர் இழந்துவர்களுக்கு ஒரு வருத்தம் கூட தெரிவிக்காமல் பிரதமர் இருப்பதன் காரணம் என்ன..?

தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையின் கையில் உள்ளது அனில் அகர்வால்காக அரசு செயல்படுகிறது
என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.

கோரிக்கைகள் :

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது.
சுட்டு கொன்ற அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
அரசு இதற்கு உடனடியாக அவசர சட்டம் தீர்மானம் இயற்ற வேண்டும்.
அரசு சார்பாக இறந்தவர்களுக்கு நினைவு சின்னம் அமைக்க வேண்டும்…